கோலாலம்பூர் | ஏப்ரல் 10, 2026
கோலாலம்பூர், ஜாலான் இயூ மேம்பாலத்தை (Jalan Yew bridge) மறுசீரமைக்கும் பணிகள் மற்றும் உத்திரங்கள் (Girder) அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஏப்ரல் 10) முதல் அங்கு தற்காலிக சாலை மூடல் அமல்படுத்தப்பட உள்ளது.
இன்று ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ஆம் தேதி வர, தினமும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை மட்டுமே இந்தத் தடை அமலில் இருக்கும் என்று , கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சாலை மூடல் நடவடிக்கையின் கீழ் பின்வரும் பகுதிகள் உட்படுத்தப்படும், TRX முதல் புலாத்தான் புடு (Bulatan Pudu) வரையிலான பகுதி, ஜாலான் கொக்ரேன் (Jalan Cochrane) மற்றும் ஜாலான் பாசார் (Jalan Pasar) ஆகியவற்றின் சில பகுதிகள் (மஸ்ஜித் ஆலம் ஷா சந்திப்பு முதல் ஜாலான் பாசாரில் உள்ள பெட்ரோன் நிலையம் வரை).
எனவே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் வாகன ஓட்டிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
- ஜாலான் புடு (Jalan Pudu)
- ஜாலான் சான் சோ லின் (Jalan Chan Sow Lin)
- புலாத்தான் கம்போங் பாண்டான் (Bulatan Kampung Pandan)
பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாகன ஓட்டிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து எச்சரிக்கைப் பலகைகளையும், பணியில் உள்ள போக்குவரத்து அதிகாரிகளின் வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றுமாறு DBKL கேட்டுக் கொண்டுள்ளது.





















