PTPTN ஸியாரா காசே திட்டம் Simpan SSPN வழி மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குகிறது

தேசிய உயர்கல்வி நிதி நிறுவனம் (PTPTN) தனது நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து மாணவர் சமூகம், பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தேவையுள்ளோரை (அஸ்ளாப்) நேரில் சந்தித்து ஆதரவு வழங்கும் நோக்கில் ‘ஸியாரா காசே பி.டி.பி.டி.என்.’ (Ziarah Kasih PTPTN) எனும் அக்கறையுடனான அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிறந்த மாணவிக்கு அங்கீகாரம்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 எஸ்.பி.எம். (SPM) தேர்வில் 8ஏ (8A) பெற்றுச் சிறந்த சாதனை படைத்த மாணவி நூர் காஃபினா அரிசா ஷுகரி பிந்தி அப்துல்லாவை பி.டி.பி.டி.என். நேரில் சந்தித்து உதவி வழங்கியது. பினாங்கு, சிம்பாங் அம்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் மாணவிக்கான நிதி உதவியை வழங்கினார். உயர்கல்வி நிதி நிறுவனத்தின் கார்ப்பரேட் தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல் துறையின் சீனியர் தலைமை நிர்வாகி வான் ஸாவியா வான் அபு பக்கார், பினாங்கு மாநில பி.டி.பி.டி.என். இயக்குநர் முகமது முஹ்சின் அப்துல் ரகுமான் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

துயரத்திலும் தளராத உறுதி

மாணவி நூர் காஃபினா கடந்த 2026 மார்ச் 16ஆம் நாள் ஹரிராயா கொண்டாட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக தன் அன்புத் தாயார் கரியாத்தி பிந்தி டோலாவை புற்றுநோய் பாதிப்பினால் இழந்தார். குடும்பத்தின் ஒரே பிள்ளையான இவர், தாயின் பேரிழப்பிலும் தனது கல்வியில் காட்டிய உறுதி பாராட்டுக்குரியது.

டத்தோஸ்ரீ நோர்லிஷா அப்துல் ரஹிம் இது குறித்துக் கருத்துரைக்கையில், “மாணவி நூர் காஃபினாவின் உயர்கல்வித் தொடக்கத்திற்கான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிரைம் (Simpan SSPN Prime) கணக்கில் 1,000 ரிங்கிட் நிதி செலுத்தப்பட்டு இன்று வழங்கப்பட்டது. தாயாரை இழந்த துயரம் ஈடுசெய்ய முடியாதது என்றாலும், இம்மாணவி தனது எதிர்காலக் கனவுகளைத் துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்ல இந்த உதவி ஓர் ஊக்கசக்தியாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Simpan SSPN சிறப்பம்சங்கள்

மலேசிய மக்களின் எதிர்கால நலனை முன்னிறுத்தி Simpan SSPN பல்வேறு சலுகைகளை வழங்குகிறது:

  • ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரையிலான வருமான வரி விலக்கு.
  • வைப்பீட்டாளர்களுக்கு இலவச தக்காஃபுல் (Takaful) காப்பீடு.
  • தகுதியுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலான இலவச இணை மானியம் (Matching Grant).
  • போட்டித்தன்மை வாய்ந்த லாப ஈவு மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய ஷரியா அங்கீகாரம்.

2025 வரவு செலவுத் திட்டத்தின் புதிய முன்னெடுப்பு

2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், காப்பாய் (Gapai) எனும் கருணை இணை மானியத் திட்டத்தின் மூலம், 4,000 ரிங்கிட் முதல் 6,000 ரிங்கிட் வரை வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் இந்த மானியச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஒரு குடும்பத்திற்கு 5,000 ரிங்கிட் வரை இணை மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும், Simpan SSPN Plus திட்டமானது மாதம் 30 ரிங்கிட் (Pakej Intan) முதல் 500 ரிங்கிட் (Pakej Berlian) வரையிலான ஆறு தேர்வுகளை வழங்குகிறது. இதில் 1.2 மில்லியன் ரிங்கிட் வரையிலான தக்காஃபுல் பாதுகாப்பு மற்றும் மரண உதவித் தொகைகளும் அடங்கும்.

உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முகமை என்ற ரீதியில், ‘பி.டி.பி.டி.என். பிரிஹாத்தின்: நாங்கள் பகிர்கிறோம், நாங்கள் உதவுறோம்’ (PTPTN Prihatin: Kami Kongsi, Kami Bantu) எனும் தாரக மந்திரத்திற்கேற்ப நாட்டின் இளைய தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டிற்காக PTPTN என்றும் துணை நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here