சந்துபோங் மலையில் சிக்கிய ஆஸ்திரேலியப் பெண்: மீட்புப் பணிகள் தீவிரம்!

கோலாலம்பூர்:

சரவாக், கூச்சிங்கில் உள்ள புகழ்பெற்ற சந்துபோங் மலையில் ஏறிய ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், மலையிலிருந்து இறங்கும் போது தவறி விழுந்து சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலிண்டா லேப்பியர் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பயணி, நேற்று மாலை மலை உச்சியிலிருந்து இறங்கிய போது விபத்துக்குள்ளான நிலையில், இரவு 8.20 மணியளவில் தீயணைப்பு, மீட்புத் இலாகாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்தபோதிலும், அடர்ந்த இருள், பெரும் பாறைகள் மற்றும் சரிந்து கிடக்கும் மரங்கள் போன்ற இயற்கை தடைகளால் அவரைச் சென்றடைவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டனர்.

இன்று அதிகாலை 3.30 மணி வரை நீடித்த முதற்கட்ட மீட்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது அபெண் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள், அவரை விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here