கோலாலம்பூர்:
மலேசியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுக் கடன் விகிதம் 85 சதவீதமாக உயர்ந்துள்ள சூழலில், கடந்த 2025 டிசம்பர் நிலவரப்படி மலேசியர்கள் சுமார் 23.67 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கிரெடிட் கார்டு கடன் அட்டை நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவினங்களின் உயர்வு மற்றும் தேக்கமடைந்துள்ள ஊதிய விகிதம் காரணமாக, நகர்ப்புற மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் அட்டைகளையும், ‘இப்போது Buy Now Pay Later வாங்கிப் பின் பணம் செலுத்தும்’ (BNPL) வசதிகளையும் அதிகளவில் சார்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, 1993-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தகவல் தொடர்பு, மின்சாரம், உணவுக்கான செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள வேளையில், வருமான உயர்வு அதற்கேற்ப இல்லாததே இந்த நிதி நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
கடன் வாங்கும் அளவு அதிகரித்திருப்பினும், பெரும்பாலான கடன்கள் வீட்டு வசதித் துறையைச் சார்ந்தவை என்பதால் நாட்டின் நிதி அமைப்புக்கு உடனடி ஆபத்து ஏதுமில்லை என பேங்க் நெகாரா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
























