12வது மலேசியத் திட்ட இடைக்கால ஆய்வு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்

கோலாலம்பூர்:

ன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் 12வது மலேசியத் திட்டம் (12MP ) மத்திய கால மதிப்பாய்வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்கள் இன்று தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற நாட்காட்டியின்படி, 12MP MTR இன்று திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதானால் இன்று பிற்பகல் நாடாளுமன்றக் குத்திடம் இருக்காது. அத்துடன் இதன் மீதான விவாதம் செவ்வாய் முதல் வியாழன் வரை நடைபெறும் என்றும், அதே நேரத்தில் அமைச்சர்களின் கேள்விக்கான பதில்கள் வழங்கும் குத்திடம் அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய் (செப். 18-19) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நடந்த 15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தை அமைத்த பின்னர், ஒற்றுமை அரசாங்கத்தால் MTR தாக்கல் செய்வது இதுவே முதல் முறையாகும்.

12MP – RM400பில்லியன் ஒதுக்கீடு கொண்டது என்றும், இது செப்டம்பர் 27, 2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது, இது நாட்டின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தில் (2021-2025) மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் வளர்ச்சி வித்திடும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here