இஸ்ரேல் மீது இந்திய மக்களிடம் அதிக அன்பு உள்ளது; பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்

ஜெருசலேம்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஜோர்டான் பள்ளத்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச நாடுகளுடனான ராஜாங்க ரீதியிலான உறவை இஸ்ரேல் வலுப்படுத்துவது குறித்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பெஞ்சமின் நெதன்யாகு

நிகழ்ச்சியில் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது, நாம் நமது கூட்டாளி நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி வருகிறோம். மிகப்பெரிய அளவில் கூட்டாளிகளை விரிவுபடுத்தி வருகிறோம். மிகப்பெரிய சக்தியான இந்தியாவுடன் நான் தனித்துவமான ராஜாங்க உறவு கொண்டுள்ளோம். உலகில் பல நாடுகளிடம் நாம் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெறவில்லை. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இஸ்ரேல் மீது இந்திய மக்களிடம் அதிக அன்பு உள்ளது. உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு எனக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here