( ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநிலத்தில் புதிய அரசு மருத்துவமனை ஒன்று உருவாக உள்ளது. 875 மில்லியன் மதிப்பிலான இந்த திட்டம், ஹாங் துவா ஜெயா நாடாளுமன்றப் பகுதியில் 59.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
இந்த திட்டம், மலேசிய சுகாதார அமைச்சின் 13வது மலேசியத் திட்டத்தின் ஆர்.எம்.கே 13) இரண்டாம் கீழ் முன்னுரிமை திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறுகையில் தற்போது மலாக்கா மருத்துவமனை 1,143 படுக்கைகள் மட்டுமே கொண்டிருப்பதால் கடுமையான நெரிசலை சந்தித்து வருகிறது. அதனை குறைக்கும் நோக்கில் இந்த புதிய மருத்துவமனை மிக அவசியமாகும் என்றார்.
புதிய மருத்துவமனை, நிபுணுத்துவ இரண்டாம்
தரநிலைக்கு ஏற்ப 400 படுக்கைகளுடன் அமைக்கப்படும். மேலும், இது மலாக்காவின் முதல் தென் மலேசியாவின் ஆரம்பகட்ட சிறப்பு மருத்துவ மையமாகவும் உருவாக்கப்படும்.
தற்போது கேகேஎம், ஆர்.எம்.கே 13,அர் பி 2 திட்டத்தின் கீழ் ஆரம்ப பணிகளுக்கான அனுமதி மற்றும் நிதி ஒப்புதலைப் பெறும் நிலையில் உள்ளது.
இந்த மருத்துவமனை, கேகேஎம் சொந்தமான நிலத்தில், சொக்சோ
மறுவாழ்வு மையத்துக்கு அருகில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் சிகிச்சைக்கு பிந்தைய மறுவாழ்வு சேவைகள் மற்றும் நோயாளிகளின் அணுகல் வசதிகள் மேலும் மேம்படும்.
இந்த மருத்துவமனை, குறிப்பாக இதய சிகிச்சை இதய-மார்பு அறுவை சிகிச்சை நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தும்.
அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு, மருத்துவமனை கட்டுமானம் முடிவடைய சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
End-





















