துபாயில் அதிக நேரம் செலவிடுவது ஏன்? – யுவன் சங்கர் ராஜா விளக்கம் …

சென்னை, நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், “இத்திரைப்படம் இசை ரீதியாகவும், முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பாணியிலும், ஒரு புதுமையான காட்சி மொழியுடனும் உருவாக உள்ளது. இதில் முற்றிலும் ஒரு புதிய இசை வகையை கொண்டு வர முயற்சித்து வருகிறோம்.

நான் துபாயில் வசித்தாலும் பெரும்பாலும் சென்னையில்தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் படித்து வருவதால் அங்கு அதிக நேரம் செலவிடுகிறேன். பணிகளுக்கு ஏற்ப அங்கும், இங்கும் பயணம் செய்கிறேன். நான் பணியாற்றும் திரைப்படங்கள் தாமதமாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here