மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய பெண் சூப்பர்பைக் வீராங்கனை விபத்தில் பலி!

கோலாலம்பூர்:

கோலா திரெங்கானுவில் நடைபெற்ற அதிவேக மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய 40 வயதுடைய பெண் சூப்பர்பைக் வீராங்கனை ஒருவர், நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் ஜாலான் ஜம்பாத்தான் கோலா இபாய் (Jalan Jambatan Kuala Ibai) அருகே ‘அப்ரில்லா’ (Aprilia) ரக சூப்பர்பைக் விபத்துக்குள்ளானது குறித்துப் பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் (ACP) அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின்படி, சிலாங்கூர், பண்டார் பாரு சாலாக் திங்கியைச் சேர்