“ஏன் காவி நிற ஆடை அணிந்துள்ளீர்கள்?”.. நடிகை பிரியா வாரியரிடம் செய்தியாளர் சர்ச்சை கேள்வி…

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பிரியா வாரியர் காவி நிற உடையில் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருந்த செய்தியாளர் ஒருவர், “ஏன் காவி நிற ஆடை அணிந்துள்ளீர்கள்? கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது கண் சிமிட்டும் காட்சியால் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். திரைப்படங்களைத் தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பிரியா வாரியர் காவி நிற உடையில் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருந்த செய்தியாளர் ஒருவர், “ஏன் காவி நிற ஆடை அணிந்துள்ளீர்கள்? கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

பிரியா வாரியர் கொடுத்த பதில்
செய்தியாளர் கேட்ட கேள்வியால் சற்று சங்கடமடைந்த பிரியா வாரியர், அதற்கு தெளிவாக பதிலளித்தார். “இந்த நிறுவனத்தின் பிராண்ட் நிறம் காவி. அதற்கு ஏற்ப நான் இந்த ஆடையை தேர்வு செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரியா வாரியரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here