அதிகாலை விழிப்பவர்களை தாக்கும் புதிய பிரச்னை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பொதுவாக அதிகாலை விழிப்பது ஒரு நல்ல பழக்கமாக கருதப்படுகிறது. அதிகாலை விழிப்பதால் நாம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறோம். அதிகாலை எழுந்துவிட்டால் அன்றைய நாள் முழுவதுமே நமக்கு நிறைய நேரம் இருப்பது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். ஆரோக்கிய ரீதியாகவும் அதிகாலை எழுவது பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது இன்னும் பல்வேறு பலன்களை தரக்கூடியதாக அமைகிறது. காலை சூரிய ஒளியில் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, நமது உடல் இயற்கையாகவே வைட்டமின் D ஊட்டச்சத்தை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது. ஆனால் அதிகாலை எழுவதால் ஒரு பிரச்னையும் உள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதிகாலை எழுவதால் ஒரு உணவு கோளாறு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காலை விரைவாக எழுவதால் அனோரெக்சியா நெர்வோசா (anorexia nervosa) என்ற பிரச்னை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனோரெக்சியா நெர்வோசா என்பது குறைந்த எடை, உணவு கட்டுப்பாடு, உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற பயம் போன்றவை அடங்கிய ஒரு உணவுக் கோளாறு ஆகும். அனோரெக்சியா நெர்வோசா கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாகவே எழுந்து விடுவார்கள் என்று ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த ஆய்வு அனோரெக்சியா நெர்வோசா மற்றும் தூக்கமின்மை அபாயம் இடையே ஒரு தொடர்பை கண்டுபிடித்துள்ளது.

பிற கோளாறுகளைப் போல அல்லாமல் அனோரெக்சியா நெர்வோசா என்பது அதிகாலை எழுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் மனித உடலின் தூக்கம் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் உடலின் உட்புற கடிகாரம் அல்லது சர்க்காரியன் கடிகாரம் மற்றும் உணவு கோளாறுகளுக்கு இடையே உள்ள தொடர்பை பற்றிய பரிந்துரைகளை செய்தது.

அனோரெக்சியா நெர்வோசா கோளாறுக்கு காரணமான ஜீன்கள் மற்றும் காலை விரைவாக எழுவது, இரவு விரைவாக தூங்க செல்வது போன்றவற்றுடன் தொடர்புடைய ஜீன்கள் ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பை மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் (Massachusetts General Hospital – MGH) சேர்ந்த புலனாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு புதிய ஆய்வு மூலமாக கண்டுபிடித்துள்ளது.

அனோரெக்சியா நெர்வோசா கோளாறுடன் தொடர்புடைய மரபணு அபாய மதிப்பீடு தூக்கமின்மை அபாயத்துடன் அதிக அளவு தொடர்பை கொண்டுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here