ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் 46 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளது. அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 11ஆவது நாளான நேற்று இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது.
இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, இந்தியா 6 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளை, 143 தங்கம், 62 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 254 பதக்கங்களுடன் சீனா பட்டியலில் 1ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






















