கும்பலின் அராஜக செயலால் உயிரிழந்த ஆடவர்

பந்திங் பகுதியில் நேற்று கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட ஒருவரின் வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12.01 மணிக்கு MERS 999 மூலம் இந்தச் சம்பவம் குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக கோல லங்காட் காவல் துறைத் தலைவர் அக்மல்ரிசல் ராட்ஸி கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

20 வயதுகளில் இருந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக அவர் கூறினார். விசாரணைகளுக்கு உதவுவதற்காக, பந்திங் பகுதியில் 30 வயதுகளில் உள்ள மூன்று உள்ளூர் நபர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான நோக்கம் பழிவாங்கும் செயல் என நம்பப்படுகிறது, ஆனால் சந்தேக நபர்களுக்கும், பெற்றோருடன் வசித்து வந்த பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான உறவு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here