கோலாலம்பூர்:
இரும்பு கம்பியால் தனது மைத்துனரை தாக்கியதாகக் கூறப்படுக் உள்ளூர் பாடகர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) புகார் கிடைத்ததாகவும், செராஸின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சண்டை நடந்ததாகவும்
செராஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஷாம் ஹலீம் ஜமாலுதீன் கூறினார்.
“சந்தேக நபர் தனது மனைவியின் சகோதரரான புகார்தாரரை உலோகக் கம்பியால் தாக்கியதாகவும், இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.
“புகாரின் அடிப்படையில், இன்று (மார்ச் 25) நள்ளிரவுக்குப் பிறகு, செராஸ் போலீஸ் தலைமையகத்தின் வளாகத்தில் வைத்து, 64 வயது சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர் மார்ச் 28 வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ACP ஷாம் ஹலீம் தெரிவித்தார்.





















