புதுடில்லி: 2024ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% ஆக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த 2 ஆண்டுகளில், உலக அளவில் வேகமாக வளர்ச்சியடையும் பகுதி தெற்கு ஆசியாவாக இருக்கும். இங்கு 2025ம் ஆண்டில் வளர்ச்சி வீதம் 6.1 சதவீதமாக இருக்கும்.
2024ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% ஆக உயரும். தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெற்காசியாவின் உலக வங்கியின் துணைத்தலைவர் மார்ட்டில் ரைசர் கூறியதாவது: வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிலம், தொழிலாளர் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.





















