ஆண்டுதோறும் சுமார் 180,000 புதிய மாணவர்கள் PTPTN நிதி உதவியை பெறுகின்றனர்

கோலாலம்பூர்:

ஆண்டுதோறும் சுமார் 180,000 புதிய மாணவர்கள் தேசிய உயர்கல்வி நிதி நிறுவனத்தின் (PTPTN) நிதி உதவியின் பலனைப் பெறுகின்றனர் என்று அதன் தலைமை நிர்வாகி அமாட் தாசுகி அப்துல் மஜித் தெரிவித்தார்.

நாட்டின் பிள்ளைகள் லட்சியங்களை அடைவதில் ஒரு உருதுணையாகவும், பெரிய நிதி பங்களிப்பாளராகவும் PTPTN உள்ளது என்று அவர் கூறினார்.

PTPTN ஒவ்வொரு மாணவர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

“ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்வி நிறுவனங்களில் (IPT) ஏற்றுக்கொள்ளப்படும் 350,000 மாணவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் PTPTN கடன்களைப் பெறுகிறார்கள்.

PTPTN முதன்முதலில் நிறுவப்பட்டபோது சுமார் 27,000 பேர் மட்டுமே நிதியுதவி பெற்றனர்,” என்று சமீபத்தில் பெர்னாமா வானொலியில் அமாட் தாசுகி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here