நாளைக் காலை நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்:

நாளை உலகெங்கிலும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மலேசியா நாளைக்காலை மழையுடன் கூடிய வானிலையை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நாளை காலை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் கெடா, பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங், திரெங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் பிற்பகலில் இதே வானிலை நிலவும் என்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜோகூர், பகாங், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் இரவில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here