துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் நடந்த விபத்தில் பதின்மவயது சிறுவன் பலி

பாலிக் பூலாவ்:

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரு பதின்ம வயதுப் பையன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 4.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 17 வயது இளைஞர் ஜார்ஜ் டவுனில் இருந்து பத்து மாவுங் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் சசாலி ஆடாம் தெரிவித்தார்.

“விபத்திற்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் விசாரணை தொடர்வதாக” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பாலிக் பூலாவ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here