ஜோகூர் பாரு:
உலகிலேயே முதன்முறையாக ஜோகூரில் தாவோயிஸ்ட் (Taoist) கோயில் ஒன்றில் மாசூ (Mazu) என்கிற கடவுளின் உருவத்தை செயற்கை நுண்ணறிவை (AI) வைத்து வடிவமைத்துள்ளனர்.
இக்கோயிலில் உள்ள கடவுளுடன் பக்தர்களால் பேச முடியும். AI மூலம் தோன்றும் மாசூவின் உருவம் பக்தர்களை ஆசீர்வதிக்கிறது, மேலும் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த AI உருவம் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு, அதற்கு தீர்வும் தருகிறது.
மலேசியாவின் Aimazin எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் அந்த மாசூ சன்னதியை உருவாக்கியது. அதில் சீன நடிகை லியூ ஈஃபேய் (Liu Yifei) போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் உருவம் திரையில் தெரிகிறது. அது மலேசியா, சிங்கப்பூர் பக்தர்களைக் கவர்ந்துள்ளது. இது சமூக ஊடகங்களிலும் பிரபலமாகியுள்ளது.
மாசூவின் 1065ஆம் பிறந்தநாளை முன்னிட்டு Aimazin நிறுவனம் செயற்கை நுண்ணறிவை வைத்து AI மாசூவை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






















