கோலாலம்பூர்:
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பகால பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில், 28 முதல் 32 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு Tdap எனும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த Tdap தடுப்பூசி, tetanus, difteria, pertusis போன்ற நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் என்றும், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து KKM ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும் என்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அமாட் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகள், தாய் மற்றும் குழந்தைக்குப் பாதுகாப்பானது என்று அனைத்துலக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வகை தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படவில்லை என்றபோதிலும் குழந்தையின் பாதுகாப்பை முன்னிறுத்தி அதனை எடுத்துக் கொள்ள கர்ப்பிணிப் பெண்கள் ஊக்குவிக்கப்படுவதாக டாக்டர் சுல்கிஃப்ளி கூறினார்.




















