News By Kavinmalar
தைப்பிங்,
தேசிய வகை செயிண்ட் தெரசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் சுகாதார பிரிவின் தலைவி திருமதி மேனகா முனுசாமி தலைமையில், ரத்ததான முகாம் ஒன்று சிறப்பாக நடாத்தப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 31 பேர் வெற்றிகரமாக ரத்ததானம் செய்தனர் என்று பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ராஜேந்திரா சுப்ரமணியன் தெரிவித்தார்.
பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த முகாமில், தேசிய வகை லடாங் மத்தாங் தமிழ்ப்பள்ளி, ஹோலிரூட் தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் லாடரேல் தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினரும் பங்கேற்று முழுமையான ஆதரவை வழங்கினர்.#

மொத்தமாக 38 பேர் பதிவு செய்திருந்த நிலையில், மருத்துவ காரணங்களால் 7 பேர் தங்களது ரத்ததானம் செய்ய முடியாமல் போனதால், 31 பேரிடமிருந்து மட்டுமே ரத்தம் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மலேசியா அவசரத் தன்னார்வ தொண்டூழியர் சங்கத்தின் தைப்பிங் கிளை (Persatuan Kecemasan Sukarelawan Malaysia, Cawangan Taiping) உறுப்பினர்களும் கலந்து கொண்டு தேவையான உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் மட்டுமல்லாமல், அவசர காலத்தில் ரத்த தேவைப்படும் நேரங்களில் உதவக்கூடிய வகையில் பொதுமக்களில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இதுபற்றி பெற்றோர்-ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு. இராஜகுமாரன் மற்றும் பிற பொறுப்பாளர்களும் தெரிவித்தனர்.









