கார் கால்வாயில் விழுந்து நால்வர் படுகாயம் அடைந்தனர் – ஜார்ஜ் டவுனில் சம்பவம்

ஜார்ஜ் டவுன்:

இன்று Jalan York பகுதியில், ஒரு Perodua Alza கார் ஒன்று சாலையிலிருந்து வழுக்கி ஒரு குறுகிய கால்வாயில் விழுந்த விபத்தில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகினர்.

விபத்தில் சிக்கிய நால்வரும் வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பினார். மற்ற மூவரம் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

“தீயணைப்பு துறைக்கு மதியம் 3.24 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தது. அந்த நேரத்தில், அந்த வாகனம் சாலையிலிருந்து வழுக்கி கால்வாயில் விழுந்து, நால்வரும் காருக்குள் சிக்கிக் கொண்டிருந்தனர். மீட்பு குழுவினர் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கினர்,” என்று தீயணைப்பு துறையின் உதவி இயக்குநர் ஜான் சாகன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினருடன் பொதுமக்களும் உதவினர். காயமடைந்த நால்வரும் மேலதிக சிகிச்சைக்காக பெனாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here