மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கழுத்தில் காற்றாடியின் நூல் சிக்கியதால் காயம்

Jalan Lingkaran Tengah 2 (MRR2) சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ககாற்றாடியின் நூல் சிக்கியதில் காயம் அடைந்த சம்பவ வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

27 வயதான அந்த இளைஞர், பத்து கேவ்ஸ் இலிருந்து ஸ்ரீ டாமன்சாரா நோக்கி பயணித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. திடீரென அவர் கழுத்தை சுற்றிய காற்றாடியின் நூல் பின்னர் அறுந்துவிட்டது.

அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி, செலாயாங்கில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். கழுத்தில் இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு, 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 80ன் கீழ் புலனாய்வு செய்யப்படுகிறது. சம்பவத்தால் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து விபத்தாகவில்லை என்பது ஒரு நன்மையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here