இஸ்கண்டார் புத்திரி,
இங்கு அமைந்துள்ள தாமான் புக்கிட் இந்தா பகுதியில் இன்று அதிகாலை ஒரு 6 வயது சிறுவன் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிறுவனின் 36 வயதான தந்தையால் புகார் அளிக்கப்பட்டதாக இஸ்கந்தர் புத்திரி மாவட்ட போலிஸ் தலைவர் உதவி கமிஷனர் எம். குமரேசன் தெரிவித்தார்.
“புகாராளித்தவர் தனது மகன் அதிகாலை தாமான் புக்கிட் இந்தா பகுதியில் இருந்து காணவில்லை என தெரிவித்தார்,” என்றார் அவர்.
மாயமான சிறுவன், மலேசிய இந்தியரான திஷாந்த் முனிசாமி, வயது 6 என அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
போலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




















