நாட்டின் ஆறு மாநிலங்களிலுள்ள 210 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன- நட்மா

கோலாலம்பூர், டிசம்பர் 22 :

காலை 10 மணி நிலவரப்படி, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், திரெங்கானு, கிளந்தான், பகாங் மற்றும் கெடா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 210 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு (NADMA) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங்கில் பெரா, ஜெராண்டுட், மாரான், ரவூப், பெக்கான், தெமெர்லோ, சிலாங்கூரில் கோல சிலாங்கூர், கோல லங்காட், உலு லங்காட் ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 83 கூட்டாட்சி சாலைகள் மற்றும் 126 மாநில சாலைகள் திடீர் வெள்ளம், நிலச்சரிவு, சாலை இடிபாடு, மூழ்கும் குழிகள் மற்றும் சேதமடைந்த பாலங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

“சில சாலைகள் இன்னும் அனைத்து போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன, சில சாலைகள் கனரக வாகனங்களுக்கு மட்டும் திறந்திருக்கும்” என்று NADMA அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here