பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது துணைவியாருடன் , நேற்று மாலை நான்கு நாள் பணிணமாக சீனாவின் தியான்ஜினிக்கு சென்றுள்ளார்..
2022 நவம்பரில் பதவியேற்ற பிறகு அன்வாரின் சீனப் பயணம் இது நான்காவது தடவையாகும். விமான நிலையத்தில் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், 36 பேர் கொண்ட கவுரவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் அன்வார், SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
ஆசியான் தலைவராக, அன்வார் இன்று மாநாட்டில் உரையாற்றி, மலேசியாவையும் ஆசியானையும் வணிகம் மற்றும் முதலீட்டின் துடிப்பான மையமாக நிலைநிறுத்தும் உறுதியை வலியுறுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தினூடே அன்வார் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் “ஆசியாவில் பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் பொதுப்பேச்சு ஆற்றவுள்ளார்.
செப்டம்பர் 3 அன்று, உலகப் போர் முடிவின் 80ஆம் ஆண்டு நினைவாக தியான்மென் சதுக்கத்தில் நடைபெறும் வெற்றி தின அணிவகுப்பிலும் அன்வார் பங்கேற்கவுள்ளார்.
மேலும், சீனாவின் முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் வணிக சந்திப்புகளும் இரண்டு நகரங்களிலும் நடைபெறவுள்ள நிலையில் அதிலும் பிரதமர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் மலேசிய அமைச்சர்ககள் சிலரும் சென்றுள்ளனர்.























