பகிரப்படும் உணவு ஆசீர்வாதமாக மாறும்: ஃபுஸியா சாலே

நாம் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நம்மை சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதே போல் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கு கொடுக்கும் போது  ஏற்படும் மகிழ்ச்சி அளவிலாதது. அந்த வகையில் இன்று அலுவலகம்  செல்வதற்கு முன்பு, SARA RAHMAH Box (சாரா ரஹ்மா பெட்டி) திட்டத்தில் இணைந்தேன். இன்று, MYDIN KPDN புத்ராஜெயாவிற்கு வந்தபோது நான் ஒரு பெட்டியை வாங்கினேன்.

என் கணவரும் சாரா 100 ரிங்கிட்  பெட்டியை வாங்கினார். தேவைப்படுபவர்களுக்கு நன்கொடை அளிப்பதே இதன் நோக்கம் என்று உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைத்துறை  துணை அமைச்சர்  செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜா ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

100 ரிங்கிட் SARA (ஒரு முறை) உதவி தேவைப்படாதவர்களுக்கு, இந்த Mydin முயற்சி உதவியை நன்கொடையாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. உதவியை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு நாம் அனுப்பலாம். பகிரப்படும் உணவு, கடவுள் விரும்பினால்  ஒரு ஆசீர்வாதமாக மாறும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here