மின்னல் தாக்கியதில் 37 வயதான முகமது ஷாஹாங்கிர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 7.30 மணியளவில் புகார் கிடைத்ததாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்ட் முகமது ஷாஹ்ரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் வசித்து வந்த ஷாஹாங்கிர், தனது தம்பியைச் சந்திக்க அங்குள்ள கட்டுமானப் பகுதிக்கு வந்து, கொங்சி வீட்டில் தங்கியிருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
“தம்பியைத் தேடி கட்டுமானப் பகுதிக்கு சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது. மின்னல் தாக்கியதில் அவரது கால்சட்டையின் இடப்பகுதி கிழிந்திருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது,” என்றார் அவர்.
உடனடியாக கோல லிப்பிசில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு ஷாஹாங்கிர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் அங்கு மருத்துவ அதிகாரி அவர் மரணமடைந்ததை உறுதிப்படுத்தியதாகவும் சூப்ரிண்டெண்ட் ஷாஹ்ரில் தெரிவித்தார்.
பின்னர் சவப்பரிசோதனைக்காக அவரது உடல் ரவூப் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.





















