பெட்டாலிங் ஜெயா:
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பி.கே.ஆர். இளைஞர் பிரிவு நேற்று காவல்துறையிடம் இரண்டு புகார்களை பதிவுசெய்தது.
கம்போங் சுங்காய் பாரு பகுதியில் நடைபெற்ற குடியிருப்பாளர்கள் வெளியேற்றத்தின் போது ஒருவர் அன்வாரை மிரட்டும் காட்சி டிக்டாக்கில் பரவியது.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பி.கே.ஆர். இளைஞர் பிரிவினரால் இரவு 8 மணியளவில் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன என கோலாலம்பூர் பி.கே.ஆர். இளைஞர் தகவல் தலைவர் ரைஸ் ஹம்தான் தெரிவித்டுள்ளார். நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் இப்படியான மிரட்டல்களை தாம் அவர்கள் கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டாங் வாங்கி துணை போலீஸ் தலைவர் நுஸுலான் தின், புகார் பெற்றதை உறுதி செய்ததோடு . இந்த சம்பவம் புக்கிட் அமான் சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு முன், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் படில் மார்சுஸ், சுங்காய் பாருவில் உள்ள 37 வீடுகளுக்கான நீதிமன்ற உத்தரவை மட்டுமே தாம் அமல்படுத்தினோம் என்றார். வெளியேற்றத்தை மறுத்த 14 குடியிருப்பாளர்களுடன் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும், மூவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
கம்போங் சுங்காய் பாரு பகுதியின் மறுவளர்ச்சி திட்டம் 2016ஆம் ஆண்டு தொடங்கியதாலும், சட்ட பிரச்சினைகள் மற்றும் இழப்பீடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாகஅது தாமதமடைந்தது. இதனிடையே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூட்டாட்சி பிரதேச அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
























