கத்தார் அவசர அரபு–இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு அழைப்பு- கலந்துகொள்வதை உறுதிப்படுத்தினார் அன்வார்

கூச்சிங்,

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி வழங்கிய அழைப்பை ஏற்றுக்கொண்டதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உறுதிப்படுத்தினார்.

அன்வார், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி டோஹாவில் நடைபெறும் அவசர அரபு–இஸ்லாமிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மாநாட்டில், காசா நிலைமை மற்றும் அங்கு நடைபெறும் சயோனிஸ்ட் படையெடுப்பு குறித்து விவாதிக்கப்படும் எனவும், அந்த தாக்குதல்கள் அளவுக்கு மீறியவையாக உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

“செப்டம்பர் 16-ஆம் தேதி பினாங்கில் நடைபெறும் தேசிய மட்ட மலேசியா தினக் கொண்டாட்டத்தில் நான் கண்டிப்பாக பங்கேற்பேன்,” என்று நேற்று சரவாக்கில் நடைபெற்ற, கட்சியின் மாநில தலைவர் மன்றக் கூட்டத்துக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மேலும், காசா தொடர்பான மலேசியாவின் நிலைப்பாடு, உலகளாவிய மனிதாபிமான மதிப்புரைகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here