“நீங்கள் எதைப் பயிற்சி செய்கிறீர்களோ அதில் சிறந்து விளங்குவீர்கள். ”
முன்னொரு காலத்தில் மிகவும் திறமைவாய்ந்த வில்லாளி இருந்தான். அவன் ஒரே அம்பைக்கொண்டு இலக்கைச் சரியாக எய்வதோடும் முதலில் எய்த அம்பைப் பிளக்கக்கூடிய திறமையையும் பெற்றிருந்தான். அவன் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தனது திறமையை நிரூபித்து வந்தான். அவன் சென்ற இடமெல்லாம் மக்கள் அவனுடைய திறமையைப் பாராட்டினார்கள். ஒருநாள் ஒரு சிறு கிராமத்திற்கு வந்து தன் வில்வித்தையைக் காட்டிக் கொண்டிருந்தபோது. எல்லோரும், “ஆஹ! பிரமாதம்,” எனக் கையைத்தட்டி அவனைப் பாராட்டினார்கள். ஆனால், ஒரு குரல் மட்டும் “ஆ! பயிற்சி செய்தால் எவராலும் இதைச் செய்ய முடியும்,” என்று ஒலித்தது.
இதைக் கேட்ட அந்த வில்லாளி சற்றுச் சஞ்சலமடைந்தான். எனினும் அவன் தொடர்ந்து ஒரு அம்பைக் கொண்டு முதலில் எய்த அம்பைப் பிளக்க செய்து தன் வித்தையை மீண்டும் மீண்டும் காட்டினான். எல்லோரும் மீண்டும் அவனைப் பாராட்டினார்கள். அப்போது மறுபடியும் அதே குரல் “ஆ! பயிற்சி செய்தால் எவராலும் இதைச் செய்ய முடியும்,” என்று ஒலித்தது. அதைக் கேட்ட அந்த வில்லாளி வில்வித்தையை முடித்ததும் பின்னால் சென்று குரல் எழுப்பிய அந்த நபரைக் கண்டான். அவன் தன் தோள்களில் இரு பக்கமும் ஒரு மூங்கில் தடியில் எண்ணெய் சட்டிகளை மாட்டிக்கொண்டு எண்ணெய் விற்றுக்கொண்டிருந்தான்.
அந்த வில்லாளி அவனைப் பார்த்து, “உனக்கு என்ன தைரியமிருந்தால் என் திறமையைப் பார்த்து, “ஆ! இதை பயிற்சி செய்தால் எவராலும் செய்ய முடியும்,” என்றாய்? நீயோ எண்ணெய்யைத்தான் விற்கிறாய். என்னைப் பார். என் வில்வித்தையைப் பார்த்து அற்புதமென்று மக்கள் பாராட்டுகிறார்கள் என்றான். அதற்கு அந்த எண்ணெய் விற்பவன் மீண்டும் “ஆ! இதைப் பயிற்சி செய்தால் எவராலும் செய்ய முடியும்,” நான் அதை உனக்கு நிரூபித்து காட்டுகிறேன்.” எனக் கூறிவிட்டு ஒரு போத்தலின் விளிம்பின் மேல் சிறு துளையிடப்பட்ட ஒரு நாணயத்தை வைத்து, பிறகு ஒரு பெரிய எண்ணெய் குப்பியைத் தூக்கி ஒரு துளி எண்ணெய் கூட கீழே சிந்தாமல் சிதராமல் அந்தப் போத்தலினுள் ஊற்றினான். பிறகு, அந்த எண்ணெய் விற்பவன் வில்லாளியைப் பார்த்து, “இப்போது நீ ஊற்று,” என்றான். அப்போதுதான் பயிற்சியின் மூலம் ஒன்றைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதன் உண்மையை வில்லாளி ஏற்றுக்கொண்டான்.
இப்பொழுது நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். நீங்கள் தினமும் எதைப் பயிற்சி செய்கிறீர்கள்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எந்த விஷயத்தைப் பயிற்சி செய்கிறீர்களோ அதில்தான் சிறந்து விளங்குவீர்கள். ஆகவே, ஒவ்வொரு நாளும் எதைப் பயிற்சி செய்கிறீர்கள்? கருணையைப் பயிற்சி செய்கிறீர்களா அல்லது விரக்தியைப் பயிற்சி செய்கிறீர்களா? அன்பைப் பயிற்சி செய்கிறீர்களா? அல்லது வெறுப்பைப் பயிற்சி செய்கிறீர்களா? தெளிவைப் பயிற்சி செய்கிறீர்களா? அல்லது சந்தேகத்தைப் பயிற்சி செய்கிறீர்களா? நீங்கள் தொடர்ந்து சந்தேகத்தைப் பயிற்சி செய்தால் அதில்தான் சிறந்து விளங்குவீர்கள். ஆனால், அதற்கு மாறாகத் தெளிவை பயிற்சி செய்யுங்கள். உங்கள் உள்ளத்திலிருக்கும் அமைதியைப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உள்ளே குடியிருக்கும் எளிமைத்துவத்தைப் பயிற்சி செய்யுங்கள். அப்போது உங்களையே நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள் வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:
https://www.youtube.com/@PremRawatOfficial
https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB
























