போதையில் தனது குடும்ப வீட்டிற்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயது ஆடவர் கைது

ஈப்போ:

பெங்கலான் உலு, கம்போங் செபெராங் குவாக் உலுவில் நேற்று (அக்டோபர் 29) அதிகாலை தனது குடும்ப வீட்டிற்கு தீ வைத்ததாக நம்பப்படும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் போதைப்பொருள் பாவித்து, போதையில் இருந்தபோது இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இதனால் அந்தவீடு 65 சதவீதம் எரிந்ததாகவும் பெங்கலான் உலு காவல்துறைத் தலைவர் சுல்கெப்லி இப்ராஹிம் தெரிவித்தார்.

அதிகாலை 1.08 மணிக்கு அந்த இடத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக பெங்கலான் உலு மாவட்ட காவல் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

“முதல்கட்ட விசாரணைகள் வீட்டு உரிமையாளரின் சொந்த மகனே போதையில் இந்த துரோகச் செயலை செய்ததாக கூறப்படுகிறது ,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரின் தாயார், தீக்காயங்களுக்கு உள்ளாகியதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அலோர் ஸ்டார் கெடாவில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவருக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“கெரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (நேற்று) செய்யப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் ரிமாண்ட் விண்ணப்பத்தில், சந்தேக நபர் நவம்பர் 1 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபருக்கு மெத்தம்பேட்டமைன் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436 (தீயால் ஏற்படும் தவறு) இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் சுல்கெப்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here