கோலாலம்பூர், நவம்பர் 20-
சீபுவில் தங்களது கடை வீட்டை மாதத்திற்கு RM1,000க்கு வாடகைக்கு விட்டிருந்த நடுத்தர வயதுத் தம்பதியினர், சரவாக் எனர்ஜியிடமிருந்து RM280,000 மின்சாரக் கட்டணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வாடகைக்கு குடியிருந்தவர் தனக்கென ஒரு மீட்டரை நிறுவமாலேயே, பொது மின்சார இணைப்புகளில் நேரடியாகக் கம்பி இணைத்து, கிரிப்டோகரன்சி சுரங்கத்திற்கான அதிக மின் நுகர்வு நடவடிக்கையை இரகசியமாகச் செய்துள்ளார்.
இதன் காரணமாக, சரவாக் மின்சாரச் சட்டத்தின் கீழ், நிலத்தின் உரிமையாளர்கள் இந்தக் கட்டணப் பாக்கிக்குச் சட்டப்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இறுதியில், சரவாக் எனர்ஜி நிலுவையில் உள்ள தொகையை RM98,000 ஆகக் குறைக்க ஒப்புக்கொண்டது.
இந்தச் சம்பவம், நில உரிமையாளர்கள் வாடகைதாரர்களைச் சரிபார்ப்பது, குத்தகை விதிமுறைகளை விளக்குவது மற்றும் இத்தகைய மோசடியைத் தவிர்க்க திடீர் சோதனைகளை நடத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தப்படுவதுடன், சட்டச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க நில உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
























