கோத்தா கினபாலு:
GRS கூட்டணியின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சபா சட்டமன்ற தேர்தலில். சபா மாநில ஜசெக கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், சபா ஜசெக தற்போது எந்தவொரு பதவியையும் சபா மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் ஏற்க திட்டமிடவில்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு, சபா சட்டமன்ற தேர்தல் முடிவுகளை விவாதிக்க அவசர மத்தியச் செயலவை கூட்டம் நடைபெற்று, அதில் அதிருப்தியான வாக்காளர்களின் கருத்துகள் மற்றும் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் ஆராயப்பட்டன.
அந்தோணி லோக், தேர்தல் பிரச்சார காலத்தில் நேரடியாக மக்கள் சந்திப்பில், அவர்களின் அதிருப்தியான மனநிலையை கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் நன்கு உணர்ந்திருந்தனர் எனவும், இது தேர்தல் முடிவுகளில் தெளிவாக வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுதல் வரை சபா ஜசெக எந்தவொரு பதவியையும் ஒற்றுமை அரசாங்கத்தில் ஏற்கமாட்டாது எனவும், அடுத்த ஆறு மாதங்களில் பிரதமர் மற்றும் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது மூலம், சபா ஜசெக தன்னுடைய அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் முழுமையாக ஈடுபடும் முனைப்பைக் காட்டியுள்ளது.




















