கோலாலம்பூர்,
எஸ்எஸ்பிஎன் பிளஸ் திட்டத்தில் வைப்புத்தொகை செலுத்தியிருந்த காலஞ்சென்ற ரொஹாயா பிந்தி ஜஃபார் குடும்பத்தாரை பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர்கல்விக் கழக நிர்வாகத்தினர் சந்தித்து தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
வைப்புத் தொகையாளரின் குடும்பத்தார் எதிர்நோக்கியுள்ள இந்தச் சிரமமான காலகட்டத்தில் அவர்களுக்கு ஆதரவும் அக்கறையும் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிடிபிடிஎன் வெளியிட்ட அறிக்கை கூறியது.
குவா மூசாங் கிளாந்தானில் உள்ள ரொஹாயா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தவர்களுள் சிக்கு 3 தேசியப்பள்ளி, மாணவர் நலத்துறை துணை உதவியாளர் அகமட் இபாடுல்லா சம்சுடின், அகமட் டசுக்கி அப்துல் மஜிட், இதே பள்ளியைச் சேர்ந்த அஸ்மான் பின் ஹுசேன், ஹம்டான் ரஸாலி, (பிடிபிடிஎன் மாநில அலுவலக இயக்குநர்) தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் ஆகியோரும் அடங்குவர்.
42 வயதான ரொஹாயா கடந்த மே மாதம் 15ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் எஸ்எஸ்பிஎன் பிளஸ் சேமிப்புத் திட்டத்தில் தனது மூன்று பிள்ளைகளுக்காக டிசம்பர் 2024 டிசம்பர் 26ஆம் தேதி ஒரு கணக்கைத் திறந்திருந்தார்.
மாதம் 30 ரிங்கிட் செலுத்தும் திட்டத்தில் இவர் பங்கேற்றார். இந்தத் திட்டத்தின் மூலம் அவருடைய குடும்பத்தார் இப்போது நன்மை பெற்றுள்ளனர். விபத்துக் காரணமாக உயிரிழந்த அவருடைய பிள்ளைகளுக்கு உதவித் தொகை வங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கணக்கிற்கும் 50 ஆயிரம் ரிங்கிட் என மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கணக்கிற்கும் மரண சகாய நிதியாக 2,800 ரிங்கிட் என்று மொத்தம் 8,400 ரிங்கிட் வழங்கப்படுகிறது. இவருடைய குடும்பத்தார் பெற்ற மொத்த தொகை ஒரு லட்சத்து 58,400 ரிங்கிட்டாகும்.
வைப்புத் தொகையாளர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் பிடிபிடிஎன்
கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகிறது என்று பிடிபிடிஎன் நிர்வாகத் தலைவர் அகமட் டசுக்கி அப்துல் மஜிட் கூறினார்.




















