நாட்டின் பல பகுதிகளில இன்று மாலை 7 மணி வரை இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் -மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், பிப்ரவரி 4:

மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று மாலை பலத்த காற்று, இடிமின்னல் மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறுகிய கால எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த வானிலை தீபகற்ப மலேசியாவின் கெடா, பேராக், திரெங்கானு, பகாங், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் சில மாவட்டங்களின் முக்கிய நகரங்களான ஜோகூர் பாரு, குவந்தான், பெக்கான், சிகாமாட், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய இடங்களும், கிழக்கு மலேசியாவின் சரவாக் மற்றும் சபாவின் உட்புறப் பகுதிகள் மற்றும் மேற்கு கடற்கரை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் (20mm) அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போதோ அல்லது எதிர்பார்க்கப்படும் போதோ இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, இந்த வானிலை இன்று இரவு 7 மணி வரை தொடர வாய்ப்புள்ளது.

எனவே பயணங்களை திட்டமிடவும் அல்லது தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பலத்த காற்றின் போது மரங்கள் அல்லது பலவீனமான கட்டமைப்புகளுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here