கோலாலம்பூர் | மார்ச் 12, 2026:
மலேசியாவின் பகாங், ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று மாலை 4:00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங் (Pahang): மாரான் (Maran), குவந்தான் (Kuantan), பெரா (Bera), பெக்கான் (Pekan), ரொம்பின் (Rompin) ஆகிய பகுதிகள் மற்றும் ஜோகூர் (Johor): சிகாமாட் (Segamat), பத்து பஹாட் (Batu Pahat), குளுவாங் (Kluang), பொந்தியான் (Pontian), பூலாய் (Pulai)ஆகியவையும் சரவாக் (Sarawak): ஸ்ரீ அமான் (Sri Aman), செலாங்காவு (Selangau – சிபு),
மூக்கா (Mukah), பிந்துலு (Bintulu) ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் அல்லது தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.




















