மலாக்கா:
2026 வரவு செலவு திட்ட ஏற்பாடுகள் அமைச்சு ரீதியில் உறுதிப்படுவது மட்டுமின்றி ஒவ்வொரு மாநில பொருளாதார முன்னுரிமைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வாழ்க்கை செலவீனங்களை எதிர்கொள்வது போன்ற மக்கள் தேவைகளை புறம் தள்ளாமல் பொருளாதார வளர்ச்சி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இந்த செயல்முறை அவசியமாகின்றது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட பலம் உள்ளது. உதாரணத்திற்கு மலாக்காவில் சுற்றுலா, உற்பத்தி துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. காரணம் அவற்றில் அடைவு நிலை மேலோங்கி உள்ளது என இன்று நடைபெற்ற அத்துறைகளை சேர்ந்தவர்களுடனான சந்திப்பில் அவர் சொன்னார்.
அதே சமயம் வாழ்க்கை செலவீனங்கள் அதிகரிப்பு குறித்த மக்களின் கவலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். காரணம் மக்கள் மத்தியில் பொருளாதார இடைவெளி உள்ளது என்றார் அவர்.
முன்னதாக இந்த சந்திப்பில் மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப், சுற்றுலா- கலை- கலாச்சார துறை துணையமைச்சர் டத்தோ கைரூல் ஃபிர்டாவுஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



















