மலேசியா ஏன் ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்வதில்லை? – அமைச்சர் ஜொஹாரி விளக்கம்

கோலாலம்பூர்:

லேசியா நாள் ஒன்றுக்கு சுமார் 400,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், மற்ற ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் நிலையில் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தாலும், அதன் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய தினமும் 400,000 பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதனால் மலேசியா ஒரு ‘நிகர எண்ணெய் இறக்குமதியாளர்’ (Net Oil Importer) ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் பற்றாக்குறையாக இருந்தாலும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியில் மலேசியா முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானம், கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவுகிறது.

தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழலிலும், RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் அரசாங்கத்தால் இன்னும் பராமரிக்க முடிகிறது என்று அமைச்சர் உறுதியளித்தார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 27-வது ஆசியான் பொருளாதார சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடிக்கு மத்தியிலும் மலேசியாவின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், போர்ச் சூழல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here