கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கான தமது சிறப்புப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டு இன்று நாடு திரும்பினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட அழைப்பின் பேரில், அந்நாட்டின் ‘வெற்றி தின’ (Victory Day) கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக கடந்த மே 6-ஆம் தேதி மாஸ்கோ சென்றடைந்த மாமன்னர், அங்கு நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.
ரஷ்ய அரசாங்கம் மலேசியாவிற்கு வழங்கிய மிக உயரிய அங்கீகாரமாக இச்சிறப்பு அழைப்பு கருதப்படுகிறது. மாமன்னர் பயணித்த தனி விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 3:30 மணியளவில் வ்னுகோவோ-2 (Vnukovo-2) அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த இப்பயணத்தைத் தொடர்ந்து, மாமன்னர் இன்று கோலாலம்பூர் வந்தடைந்தார்.





















