பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், செபராங் ஜெயாவில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் விழா, வரலாற்று முத்திரைப் பதித்துள்ளது!

​”கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!” என்ற புரட்சிக்கவிஞரின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, கடந்த மே 31 ஞாயிற்றுக்கிழமை அன்று, செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இவ்விழா மிக பிரமாண்டமாக அரங்கேறியது.

​சங்கத்தின் தலைவர் செ.குணாளன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இவ்விழாவின் முத்தாய்ப்பாக, தாபா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார். மலேசிய மண்ணில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் காக்க வேண்டியதன் அவசியத்தை அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

​உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும், பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் பேராதரவிலும், பாவேந்தரின் புரட்சிச் சிந்தனைகள் செபராங் ஜெயா மண்ணில் மீண்டும் ஒருமுறை ஓங்கி ஒலித்துள்ளன!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here