ஜோ பிடனின் நடவடிக்கை குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர்

வாஷிங்டன்

அமெரிக்காவின் அதிபராகியிருக்கும் ஜோ பிடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்  குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் நாட்டு மக்களிடம்  உரையாற்றினார். அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான வல்லுநர் குழுவை திங்கள்கிழமை  அறிவிப்பதாக ஜோ பிடன் கூறியிருந்தார்.

இந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி, இங்கிலாந்தில் பிறந்தவர்.

அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த போது, அந்நாட்டின் 19- ஆவது மருத்துவத் துறை தலைவராக நியமிக்கப்பட்டவர் விவேக் மூர்த்தி. பின்னர் டொனால்ட் டிரம் பதவி ஏற்ற நிலையில் அந்த பொறுப்பில் இருந்து விவேக் மூர்த்தி விலக நேரிட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரமிளா ஜெயபால், விவேக் மூர்த்தி ஆகியோரை சுகாதார குழுவின் இணை தலைவர்களாக ஜோ பிடன் நியமித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.