புதிய அதிபரால் மலேசிய அமெரிக்க நல்லுறவுகள் தொடரும்

கோலாலம்பூர்-

 கோவிட் -19 தொற்றுநோயின் பேரழிவு தாக்கங்கள் உட்பட பல உலகளாவிய சவால்களை அனைத்துலக சமூகம் எதிர்கொள்ள முற்படுகையில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் தலைமையின் கீழ் அமெரிக்காவுடன் மேலும் இணக்கத்தை  வலுப்படுத்த மலேசியா எதிர்நோக்குகிறது.

அண்மையில் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிடன் பெற்ற வரலாற்று வெற்றியைப் பாராட்டிய பிரதமர் டான்ஸ்ரீ முஹிடீன் யாசின்,  ஜோ பிடன் தனது ஜனாதிபதி பதவியில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
மேலும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரிடலாம் என்ற அவர் அமெரிக்காவின் தேர்தல் செயல்முறையை மிகுந்த எதிர்பார்ப்புடன் நெருக்கமாக கவனித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

 

அமெரிக்க வாக்காளர்கள்  ஜோ பிடனை அமெரிக்காவின் 46   ஆவது அதிபராக அவரது தலைமைக்கு  ஒப்புதல் அளித்திருக்கிறது. இது ஜனநாயகத்தின் முடிவு.

வேகமாக வளர்ந்து வரும் நாடாக, மலேசியா அமெரிக்காவுடனான அதன் உறவுகளுக்கு பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது. அமெரிக்க-மலேசியா விரிவான கூட்டாண்மை இரு நாடுகளுக்குமிடையில் சுறுசுறுப்பான, பன்முக ம பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான ஒரு விரிவான கட்டமைப்பாக தொடர்கிறது  என்று அவர் தெரிவித்தார்.