முன்னாள் கால்பந்து வீரருக்கு இரங்கல்

கோலாலம்பூர்

கால்பந்து விளையாட்டில் தனி முத்திரை பதித்த ஜாம்பவான் டத்தோ முஹமட் பக்கார் தமது 75 ஆவது வயதில் நேற்று காலமானார். அவரின் குடும்பத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடீன் யாசின் அவர்தம் குடும்பத்தினர்     ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.

பேஸ்புக்கில் ஒரு பதிவில் இந்த இழப்பு குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்ட முஹிடீன், இந்த கடினமான காலத்தை எதிர்கொள்வதில் முஹமட் பக்காரின்  குடும்பம் வலுவாக இருக்கும் என்று நம்பினார்.

அரசாங்கத்தின் சார்பாக, தனது கால்பந்து விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார். குறிப்பாக தேசிய அணிக்கு, 1972 இல் மியூனிக் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற உதவியது என்று அவர் கூறினார்.

1980 ஆண்டுகளுக்கு மாஸ்கோ ஒலிம்பிக் அணியின் உதவி பயிற்சியாளராகவும், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய தலைமை பயிற்சியாளராகவும் சென்ற முஹமட் தேசத்திற்கு செய்த சேவைகளை அரசாங்கம் மறக்காது என்று பிரதமர் கூறினார்.

அவரது சேவைகளும் தியாகங்களும் தேசத்தினாலும் மக்களாலும் என்றென்றும் போற்றப்படத்தக்கவை.

மறைந்த முகமட் ஆத்மா ஆசீர்வதிக்கப்பட்டு நீதிமான்களின் மத்தியில் வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.