முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம், சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதுதான் நல்லது என்கிறார்.
ஜாகிர் நாய்க்கால் மலேசியாவில் சில சர்ச்சைகள் உருவாகியிருப்பதை அடுத்து ரயிஸ் அவ்வாறு கூரினார்.
“ஜாகிர் இங்கு வருவதற்குமுன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். அவர் இப்போது இந்துக்களைச் சிறுமைப்படுத்திச் சீண்டி விட்டிருக்கிறார்.
“ஜாகிர் சச்சரவுகளைத் தூண்டிவிடுபவராக விளங்குகிறார். அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது”, என்று ரயிஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.