சுசீந்திரம் கோயிலில் கார்த்திகை மாதத்தின் எல்லா நாள்களிலும் இரவு நேரங்களில் மாணிக்க ஸ்ரீபலி என்ற சுவாமி பவனி நடக்கும். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தபோது மாணிக்க ஸ்ரீபலி நடந்துகொண்டிருந்தது.
சுசீந்திரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வரலாற்றையொட்டி மூக்குத்தி அம்மன் என்ற சினிமா எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதற்காகக் கன்னியாகுமரி, தலக்குளம் எனக் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் குமரி மாவட்டக் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார் நயன்தாரா.

பின்னர் வெளியே வந்தவர், அங்கு நின்றிருந்த குழந்தைகளை அருகில் அழைத்துப் பேசினார். சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இன்று சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தரிசனம் செய்ய இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் நயன்தாராவுடன் வந்தவர்கள் தெரிவித்தனர்.