ஆஸி ஹோபர்ட் டென்னிஸ் போட்டி: சானியா ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்

ஹோபர்ட் –

ஆஸ்திரேலியா ஹோபர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இப்போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

உக்ரேன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோத்து விளையாடிய சானியா மிர்சா (வயது 33), நேற்று முன்தினம் நடந்த கால் இறுதியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை 6-2,4-6,1-04 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதியில் சானியா – நாடியா ஜோடி 7-6, 6-2 என்ற செட் கணக்கில் செக். குடியரசின் பவுஸ்கோவா – சுலோவேனியாவின் ஸிடான் ஜோடியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி வெற்றிபெறுவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி 40 நிமிடங்கள் ஆகும்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவின் சாங் சுவாய் – பெங்க் சுவோ இணையை சானியா மிர்சா ஜோடி எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெற்றால் சானியா மிர்சா புதிய சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here