ஆடை படத்திற்கு பின் அமாலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. புதுமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்த படத்தில் அமலா பால் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதுபோல ‘டீஸரில்’ காட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகை அமலாபால் பேசும்போது, “இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்” என்றார்.