புதுடில்லி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி!

சென்னை –

புதுடில்லி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர இருக்கிறார். அவருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மாபெரும் தேர்தல் வெற்றி மூலம் புதுடில்லியில் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சி – வகுப்புவாதத்தை வீழ்த்தும் என்பதற்கான தெளிவான நிரூபணம் இது. நாட்டின் ஒற்றுமைக்காக நாம், கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here