கடன் வாங்குவது, ஊழல் செய்வது அதிமுக அரசு

மதுரை –

ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன், தற்போது நான்கரை லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற விழாவில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் திமுகவில் இணைந்தார்.

இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், என பல்வேறு சாதனைகளை திமுக செய்ததாக குறிப்பிட்டார்.

சென்னை பள்ளிக்கரனையில் பதாகை விழுந்து உயிரிழந்த ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு, ஆறுதல் தெரிவிக்காத அதிமுகவினர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் அறிவித்திருப்பதை, எப்படி ஏற்பது எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், தற்போது ரூ.4.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும் விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here